இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 22

அறத்துப்பால் (Virtue) - நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பொருள்: பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

To con ascetic glory here
Is to count the dead upon the sphere. 

English Meaning: The greatness of those who have given up both material and emotional desires is beyond measure, like trying to count all the people who have ever died. Their selflessness is so vast that it’s impossible to fully understand or describe.