திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 304
அறத்துப்பால் (Virtue) - வெகுளாமை (Restraining Anger)
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.
பொருள்: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.
Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?
English Meaning: Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?