திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 352
அறத்துப்பால் (Virtue) - மெய்யுணர்தல் (Truth-Conciousness)
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு
பொருள்: மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
Men of spotless pure insight Enjoy delight devoid of night.
English Meaning: A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).