இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 433

பொருட்பால் (Wealth) - குற்றங்கடிதல் (The Correction of Faults)

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

பொருள்: பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

Though millet-small their faults might seem
Men fearing disgrace, Palm-tall deem.

English Meaning: Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.