திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 521
பொருட்பால் (Wealth) - சுற்றந் தழால் (Cherishing Kinsmen)
பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள
பொருள்: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
Let fortunes go; yet kinsmen know The old accustomed love to show.
English Meaning: Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).