திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 522
பொருட்பால் (Wealth) - சுற்றந் தழால் (Cherishing Kinsmen)
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும்.
பொருள்: அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
The gift of loving Kins bestows Fadeless fortune's fresh flowers.
English Meaning: If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth.