திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 523
பொருட்பால் (Wealth) - சுற்றந் தழால் (Cherishing Kinsmen)
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.
பொருள்: சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை,#குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
A kinless wealth is like a tank Which overflows without a bank.
English Meaning: The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.