திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 520
பொருட்பால் (Wealth) - தெரிந்து வினையாடல் (Selection and Employment)
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு
பொருள்: தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
Worker straight the world is straight The king must look to this aright.
English Meaning: Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.