இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 75

அறத்துப்பால் (Virtue) - அன்புடைமை (Compassion)

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்: உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

The crowning joy of home life flows
From peaceful psychic love always. 

English Meaning: The greatest joy in both this world and the next arises from a home life rooted in love. Thiruvalluvar highlights that a life of harmony and affection within the family brings true happiness and spiritual fulfillment, making love the foundation of a blessed existence.