திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 943
பொருட்பால் (Wealth) - மருந்து (Medicine)
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கு மாறு.
பொருள்: முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
Eat food to digestive measure Life in body lasts with pleasure.
English Meaning: If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.