இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 961

பொருட்பால் (Wealth) - மானம் (Honour)

இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

பொருள்: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

Though needed for your life in main,
From mean degrading acts refrain.

English Meaning: Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.