திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 964
பொருட்பால் (Wealth) - மானம் (Honour)
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.
பொருள்: மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
Like hair fallen from head are those Who fall down from their high status.
English Meaning: They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.