இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 41

அறத்துப்பால் (Virtue) - இல்வாழ்க்கை (Married Life)

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

The ideal householder is he
Who aids the natural orders there.  

English Meaning: A true householder is one who supports and upholds the virtuous ways of the three natural orders: ascetics, hermits, and those who dedicate themselves to virtuous living. Thiruvalluvar highlights that a householder's role is not just to care for their family but to contribute to the well-being of society by assisting and sustaining those who live righteous lives.