இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 57

அறத்துப்பால் (Virtue) - வாழ்க்கைத் துணைநலம் (Spousal Goodness)

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.

பொருள்: மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

Of what avail are watch and ward?
Their purity is women's guard.   

English Meaning: No physical protection, like guards or confinement, can truly preserve a woman's honor. Her chastity and moral integrity are her greatest and most effective safeguards. Thiruvalluvar highlights that a woman's virtue is her strongest protector, surpassing any external measures.