திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 799
பொருட்பால் (Wealth) - நட்பு ஆராய்தல் (Investigation in forming Friendships)
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும்.
பொருள்: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
Friends who betray at ruin's brink Burn our mind ev'n at death to think.
English Meaning: The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.